ஹாட் நியுஸ்
A-La-Carte Rate – SCV : ADITHYA –Rs.7.65, CHUTTI TV-Rs.5.60, DISCOVERY CHANNEL TAMIL – Rs.6.75, JAYA TV – 3.80, JAYA MAX – Rs.2.50, JAYA MOVIE – Rs.2.50, JAYA PLUS – Rs.1.70, K TV – Rs.6.75, MEGA24 – Rs.2.10, MEGA MUSIQ – NA, MEGA TV – Rs.2.10, RAJ DIGITAL PLUS – Rs.3.25, RAJ MUSIX – Rs.2.10, RAJ NEWS – Rs.1.70, RAJ TV – Rs. 4.60, SUN ACTION – Rs.16.80, SUN LIFE – Rs.5.55, SUN MUSIC –Rs. 3.15, SUN NEWS – Rs.0.65, SUN TV – Rs.5.55, VIJAY TV –Rs.5.30.



2ம் கட்ட டிஜிட்டலாக்கம் : DTH க்கு மாறும் பெரும்பான்மையோர் � கருத்து கணிப்பு முடிவு..!!

அண்மையில் நடைமுறைபடுத்தப்பட்ட இரண்டாம் கட்ட டிஜிட்டலாக்கத்தில் பெரும்பாலான நகரங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலான விழிப்புணர்வு பிரச்சாரம், எச்சரிக்கை என இருந்தும் பொதுமக்கள் மற்றும் கேபிள் ஆப்ரேட்டர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு இருப்பது ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இது போன்ற ஒரு பிரச்சினை எழாமல் இருப்பதற்காக மத்திய அரசு... தொலைக்காட்சி, நாளிதழ்... ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து டிஜிட்டலாக்கம் பற்றிய விழிப்புணர்வு விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளது...

ஆனால் தற்போது... கேபிள் ஆப்ரேட்டர்களில் LCOs மற்றும் MSOs என இரு தரப்பினரும் செட் டாப் பாக்ஸ் பற்றாக்குறையாக உள்ளது எனவும்... எங்களுக்கு தேவையில்லாத ஒரு செட் டாப் பாக்ஸ் முறைக்கு நாங்கள் ஏன் கூடுதல் தொகை செலுத்த வேண்டும் என நுகர்வோர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதற்கு மத்தியில் தனியார் இணையதள நிறுவனம் அவர்களுடைய வாசகர்கள் மற்றும் பொதுமக்களிடம் நடத்திய கருத்து கணிப்பில்... சமிபத்தில் நடைமுறை படுத்தப்பட்ட இரண்டாம்கட்ட டிஜிட்டலாக்கத்தில் உங்கள் நிலை என்ன ...? என்ற கேள்வியும் அதற்கு சாய்ஸ் ஆக மூன்று பதில்களும் கொடுக்கப்பட்டன.

ஆம், நாங்கள் செட் டாப் பாக்ஸ் சேவைக்கு மாறிவிட்டோம்

எங்கள் பகுதிக்கு இன்னும் டிஜிட்டலாக்கம் அமல்படுத்தப்படவில்லை

ஆம், நாங்கள் DTHக்கு மாறிவிட்டோம்

என்று மூன்று தேர்வுகளும் கொடுக்கபட்டதில் சுமார் 1000 வாக்குகளுக்கு 50 % பேர் ஆம், நாங்கள் DTHக்கு மாறிவிட்டோம் என்ற பதிலை தெரிவு செய்துள்ளனர் எனவும் சுமார் 30% பேர் ஆம், நாங்கள் செட் டாப் பாக்ஸ் சேவைக்கு மாறிவிட்டோம் எனவும் மீதமுள்ள 20% நபர் மூன்றாவது பதிலையும் கொடுத்துள்ளனர் என அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது







       2012-01-12 20:54:21        Share/Bookmark         
  வாசகர் குரல்
     
  உங்கள் பெயர்
     
  உங்கள் மின்னஞ்சல்
     
  மொபைல்
     
  கருத்துரைகள்
     
                                   
   



#
#