புதிய தமிழ் செய்தி சேனலான GTV SPV இல்
அங்கு பணி புரியும் பணியாளர்களுக்கு கடந்த 4 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும்
இதனால் பணியாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறி வருகிறனர் எனவும் ஏற்கனவே செய்தி
வெளியிட்டிருந்தோம்...
இந்நிலையில் நேற்று மாலை மெரீனா
கடற்கரையில் ஒன்று கூடிய GTV SPV
ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக முடிவெடுத்துள்ளதாக
தெரிகிறது.. நான்கு மாதமாக ஊதிய தொகை வழங்கப்படவில்லை எனவும் அதனை தொடர்ந்தே இந்த
முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிகிறது.
இதற்கிடையில் அந்நிறுவனத்தின் செய்தியாளரின்
கூற்று : தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் சுமார் 125 பேர் செய்தியாளர்களாக பணி
புரிந்து வருகின்றனர் அவர்களுக்கும் சம்பளம் தரப்படவில்லை எனவும்... மேலும்
சம்பளத்தை யாரிடம் கேட்பது என்று கூட தெரியாமல் நிர்வாகத்தின் செயல்பாடுகள் உள்ளது
எனவும் கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில் சென்னையில் GTV ஊழியர்கள்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர் எனவும் அதே போல் அனைத்து மாவட்டங்களிலும்
உள்ள செய்தியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர் எனவும், முடிந்தால்
தமிழக அரசின் உதவியை நாடவும் திட்டமிட்டுள்ளனர் எனவும் இதற்கு செய்தியாளர்கள்
அமைப்புகள் ஆதரவு தந்து உதவினால் நன்றாக இருக்கும் எனவும் கருத்து
தெரிவித்துள்ளார்...
அதனடிப்படையில் நேற்று முதல்வரின்
தனிப்பிரிவுக்கு GTV SPVயின் ஊழியர்கள் சிலர் அனுப்பிய புகாரை அடுத்து இன்று மதியம்
அவர்களை நேரில் வர சொல்லியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வேலை நிறுத்தத்திற்கு
மறுப்பு தெரிவித்துள்ள சேனல் நிர்வாகம் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இன்று 60
ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர் எனவும் செய்தி பிரிவு ஆட்கள் மட்டுமே பணிக்கு வரவில்லை
எனவும் செய்தியாளர்களே அந்த பணியை சேர்த்து செய்கின்றனர் எனவும் நிலுவையில் உள்ள
சம்பள தொகை புதன் கிழமை முதல் சனிக்கிழமைக்குள் பைசல் செய்யப்படும் எனவும் சிலை அரியர்ஸ்
பணத்தை அவ்வப்போது முன்பணமாக வாங்கியுள்ளனர் எனவும்... வேலை நிறுத்தம் செய்ய
வேண்டுமானால் இரண்டு வாரத்திற்கு முன் அறிவிப்பு செய்து வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்க
வேண்டும் எனவே இது போன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது முறையாகாது எனவும்
நிர்வாகம் சார்பில் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கலங்க வைத்த - GTV ஊழியர்களின் சம்பள பிரச்சினை குறித்த முகநூல்
பதிவு :
