a
HomeDATA செய்திகள்அடுத்த 18 மாதங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச இன்டர்நெட்…!!

அடுத்த 18 மாதங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச இன்டர்நெட்…!!

அடுத்த 18 மாதங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச இன்டர்நெட்…!!

ktr

சனிக்கிழமை அன்று 57 வது ஆண்டு நடைபெற்ற ICANN அமைப்பின் பொதுகுழு கூட்டத்தில் பேசிய IT அமைச்சர்… மாநில அரசாங்கம் அதன் பல்வேறு கொள்கைகள் மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் ஊக்கத்தை கொடுக்கும் என்று கூறினார்.

நமது அண்டை மாநிலமான தெலுங்கான மாநிலத்தின் IT மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. KT ராமா ராவ் அவர்கள் கூறுகையில்… மாநில அரசு அடுத்த ஒன்றரை ஆண்டில் ஒவ்வொரு வீட்டிற்கும் இணைய சேவை வழங்குவதன் மூலம் மாநில அரசு மக்களுக்கு அதிகாரம் கிடைக்கும் முயற்சியில் உள்ளதாக கூறினார்.

அவர் புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க தொடங்கப்பட்ட T hub மற்றும் டிஜிட்டல் தெலுங்கானா போன்ற திட்டங்களுக்கு உலகின் பல்வேறு இடங்களில் இருந்து பாராட்டுக்களை பெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்கள் என கூறினார்.

அமைச்சர் KTR அவர்கள் கூறுகையில் தெலுங்கானாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்க ஒரு நீர் கிரிட் திட்டம் தொடங்க மாநில அரசு… குழாய்கள் போட அகழிகளை தோண்டியெடுத்து வருவதாக தெரிவித்தார்.

மக்களின் அடிப்படை தேவையான தண்ணீர் போன்று ஒவ்வொரு இல்லமும் இலவசமாக இன்டர்நெட் சேவை பெறுவது உறுதி என தெரிவித்தவர்.. அதற்காக மாநில அரசு  தண்ணீர் குழாய்களுடன் இணைந்து ஃபைபர் ஆப்டிக் கேபிள்களையும் பதிக்க முடிவு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் அவர்கள் மேலும் கூறுகையில் அடுத்த 18 மாதங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் இலவசமாக இன்டர்நெட் கிடைக்கும் என்று கூறினார்.

விழாவில் பேசிய மத்திய IT மற்றும் சட்ட அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத் அவர்கள் கூறுகையில் மத்திய அரசு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்முயற்சி மக்கள் அதிகாரம் நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டதாக கூறினார்.

Share With:
Rate This Article

tntelevision.in@gmail.com

No Comments

Leave A Comment

லைவ் டிவிX