a
Homeமுக்கிய செய்திகள்அனலாக் விநியோகத்தில் தற்போதைய நிலையை தொடரும் முயற்சியில் – அரசு கேபிள்…!!

அனலாக் விநியோகத்தில் தற்போதைய நிலையை தொடரும் முயற்சியில் – அரசு கேபிள்…!!

அனலாக் விநியோகத்தில் தற்போதைய நிலையை தொடரும் முயற்சியில் – அரசு கேபிள்…!!

dish-antenaதமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் (TACTV), ஒரு சென்னை உயர் நீதிமன்றத்தை மேற்கோள் காட்டி, அனலாக் கேபிள் சிக்னல்களை விநியோகிக்கும் நிலையை தக்கவைக்க அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு எழுதிய ஒரு கடிதத்தில், TACTV அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மனுக்களின் 34213/2013 மற்றும்  40365/2015 அவமதிப்பிற்கு வழிவகுப்பதாக உள்ளது என்று வாதிட்டார்.

இந்த கடிதம் அனலாக் கேபிள் டிவி சிக்னல்களை துண்டிக்கும் மற்றும் டிசம்பர் 31, 2016 நள்ளிரவு முதல் டிஜிட்டல் அட்ரஸபில் சிஸ்டம் (DAS)  அமல்படுத்த அனைத்து சேனல் ஒளிபரப்பாளர்கள் மற்றும் மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்கள் (MSOs) களுக்கு மத்திய தகவல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்புக்குப் பதில் கடிதமாக இருந்தது .

சேனல் ஒளிபரப்பாளர்களுடன் TACTV பகிர்ந்துள்ள ஒரு குறிப்பில், சென்னையை பொறுத்த அளவில் இன்னும் டிஜிட்டலாக்கம் DAS அமல்படுத்தப்படவில்லை, விஷயம், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மத்திய தகவல் அமைச்சம் தன்னை நவம்பர் 18, 2013 தேதியிட்ட ஒரு எதிர் பிரமாணப்பத்திரத்தில் இதை ஒப்புக்கொண்டுள்ளதாக டெலிகாம் வழக்கு தீர்வு தாக்கல் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயமான TDSAT இல் குறிப்பிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் ஜூலை 5, 2012, மற்றும் நவம்பர் 23, 2012 தேதியிட்ட…. TACTVயின்  இரண்டு ரிட் மனுக்கள் 7067/2013 மற்றும் 7068/2013, DAS உரிமம் பயன்பாடு மற்றும் செயல்படுத்த I & B அமைச்சகத்திற்கு வழிகாட்ட வேண்டி கோருதல் வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் TACTV  சென்னை மெட்ரோவில் அனலாக் சிக்னல்களின் இணைப்பை துண்டித்தலுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் இயற்றிய தடை ஆணையை சுட்டிக்காட்டியும் கடிதம் எழுதியுள்ளது.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) டிசம்பர் 10, 2013 தேதியிட்ட ஒரு வெளியீட்டில், சென்னை மெட்ரோ நகரில் அனலாக் சிக்னல்களை ஒளிபரப்புவது சட்டவிரோதம் என்பது போல வர்ணித்து… இதை எதிர்த்து TACTV தாக்கல் செய்த தடை ஆணை கோரிய மனுவில் மேற் குறிப்பிட்ட ஆணை பெறப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

Share With:
Rate This Article

tntelevision.in@gmail.com

No Comments

Leave A Comment

லைவ் டிவிX