a
HomeDATA செய்திகள்இளைஞர்களை தொழில் முனைவோரை இன்டர்நெட் ஆப்ரேட்டராக்கும் – அரசு கேபிள்…!!

இளைஞர்களை தொழில் முனைவோரை இன்டர்நெட் ஆப்ரேட்டராக்கும் – அரசு கேபிள்…!!

இளைஞர்களை தொழில் முனைவோரை இன்டர்நெட் ஆப்ரேட்டராக்கும் – அரசு கேபிள்…!!

arasu_fiberஅரசு பைபர் எனப்படும் இன்டர்நெட் சேவை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் (TACTV) மூலம் மலிவு விலையில் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வீட்டு அதிவேக இணைய சேவைகளை வழங்கும் திட்டமாகும்… விரைவில் 32 மாவட்டம் மற்றும் 124 நகராட்சிகளில் அதன் இன்டர்நெட் வணிகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது .

 இந்த நோக்கத்திற்காக, TACTV தமிழ்நாடு முழுவதும் ஒரு வருவாய் பகிர்வு அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவைகளை வழங்கும் வணிகத்த்தில் விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

“தற்போது, அரசு பைபர் 34 இடங்களில்  32 மாவட்ட தலைநகரங்களிலும் மற்றும் – திருவொற்றியூர் மற்றும் கரூர் நகரங்களில் ஒரு தனியார் தொழிலதிபர் மூலம் மேலும் இரண்டு இடங்களில் அதன் பிராட்பேண்ட் சேவை அளித்து வருகிறது. தற்போது சுமார்  1,400 வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருவதாகவும் மேலும் அரசின் இலக்கு அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சுமார் 10,000 வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் சேவையை விரிவாக்கம் செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வரவிருக்கும் மாதங்களில் சுமார் 124 நகராட்சிகள் உட்பட 132 இடங்களில் அரசு இன்டர்நெட் சேவைகளை விரிவாக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

“உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அல்லது இணைய சேவை வழங்கும் வணிகத்தில் நாட்டம் இருக்கும் எந்த ஒரு தொழில் முனைவோரும் இதில் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன் பெறுவதில் உள்ள உதவி வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி நவம்பர் 15 ஆகும், “என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் வாய்ப்புகள்  கிடைக்க பெற்ற தொழில் முனைவோர்களுக்கு TACTV  ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

TACTV கூறுகையில் தொழில் முனைவோர் லாபம் மற்றும் வெற்றியடைய… விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் 100 இணைப்புகள் தேவைப்படுகிறது. TACTV விண்ணப்பதாரர் குறிப்பிடும் எந்த ஒரு இடத்தில் குறிப்பிட்ட அலைவரிசையை ஒதுக்கீடு செய்த தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் குறைந்த பட்சம் சுமார் 100 ஆக்டிவ் இணைப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்று கூறுகிறது. வணிக பங்காளிகள் வருமானப் பகிர்வு திட்டம் TACTV மூலம் வெளியிடப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் தொழில் முனைவோர் www.tactv.in இணையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

“வெகு விரைவில், சுமார் 50,000 வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுக்கும் வகையில் சென்னையில் மையப்படுத்தப்பட்ட வலைப்பின்னல் மையம் தொடங்கப்பட உள்ளது எனவும், FTTH  தொழில் நுட்பம் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தரமான பிராட்பேண்ட் சேவையை வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Share With:
Rate This Article

tntelevision.in@gmail.com

No Comments

Leave A Comment

லைவ் டிவிX