a
HomeBARCBARC இந்தியா மீடியா ஒர்க்ஸ்டேஷன் ஆன்லைன் டெஸ்ட் தற்போது இலவசமாக…!!

BARC இந்தியா மீடியா ஒர்க்ஸ்டேஷன் ஆன்லைன் டெஸ்ட் தற்போது இலவசமாக…!!

BARC இந்தியா மீடியா ஒர்க்ஸ்டேஷன் ஆன்லைன் டெஸ்ட் தற்போது இலவசமாக…!!

barc1வெற்றிகரமாக தொடங்கிய பிறகு BARC இந்தியா மீடியா ஒர்க்ஸ்டேஷன் (BARC India Media Workstation (BMW)) BMW மேடையில் சுமார் 5,000 க்கும் மேற்பட்ட ஊடகதுறை தொழிலாளர் நலனுக்காக ஆன்லைன் சான்றிதழ் சோதனையை தொடங்கியது.  தற்போது இந்த பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் இப்போது ஒளிபரப்பாளர்கள், ஊடக நிறுவனங்கள் முழுவதற்கும் மற்றும் அதன் அனைத்து BMW சந்தாதாரர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும்  சோதனையை இலவசமாக செய்ய முடிவு செய்துள்ளது.

BARC இந்தியா, அவர்களது ஊடக திறமை மதிப்பீடு செய்வதற்காக சோதனை மற்றும் பகுப்பாய்வு செய்ய தேவை என தொழில்துறையினரின் கருத்துக்களை அடிப்படையாக ஜூலை 20, 2016 அன்று அதற்க்கான சோதனையை செய்தது.

BMW என்ற சிறப்பாக ஊடக மற்றும் விளம்பர பார்வையாளர் முடிவுகளை ஆய்வு செய்ய  வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு மென்பொருள், சந்தாதாரர்கள் தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்தும் வகையில் தொடர்ந்து பயிற்சி அளிக்கும்.

இந்த சோதனை திறன் அளவீடு என்பது தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை அளவீடு, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு, ஊடக திட்டமிடல் மற்றும் விற்பனை, மார்க்கெட்டிங் என ஒரு நிலையான தரத்தை ஏற்படுத்தும் நோக்கில் தொடங்கபடுள்ளது. தற்போது இதை இலவசமாக செய்வதன் மூலம், BARC இந்தியா இன்னும் அதிக நபர்கள் இந்த டெஸ்ட் மூலம் ஊடக தொழிலை நோக்கி ஈர்க்க முடியும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

BARC இந்தியாவின் BMW சந்தாதாரர்கள் இந்த இலவச சான்றிதழ் மூலம் தமது வேலைவாய்ப்பு திறனை மேம்படுவதோடு மட்டுமல்லாமல்,  தான் சார்ந்த ஒரு நிறுவன அமைப்பிற்கும் தங்கள் ஊழியர்களின் திறனை மதிப்பிடவும் உதவும்.

திரு.பார்த்தோ தாஸ்குப்தா, தலைமை நிர்வாக அதிகாரி, BARC இந்தியா, நாம் தொழில்துறை நண்பர்களிடம் இருந்து பெறப்படும் பதிலிளால் மிக்க மகிழ்ச்சி “, என்றார். சான்றிதழ் சோதனை ஆரம்பத்தில் கட்டண  சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டது, தற்போது  நாங்கள் எங்கள் சந்தாதாரர்களுக்கு இதை இலவசமாக செய்துவிட்டேன். இந்த சோதனையின் மூலம் நன்மை அதிகமாக கிடைக்க தொழில்துறையை ஊக்குவிக்க செய்யப்பட்டுள்ளது. ”

BARC இந்தியா சந்தாதாரர்கள் http://www.barcindia.co.in/bmw-online-certification.aspx  மீது, அவர்களின் அதிகாரபூர்வ டொமைன் பெயர் மற்றும் மின்னஞ்சல் ஐடி பயன்படுத்தி டெஸ்ட் எழுதலாம். தங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் பதிவு  செய்தால் டெஸ்ட் எழுத கட்டண நுழைவாயில் வழியாக செலுத்த வேண்டும்.

Share With:
Rate This Article

tntelevision.in@gmail.com

No Comments

Leave A Comment

லைவ் டிவிX